கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கும் கொரோனா தொற்று

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கும் கொரோனா தொற்று

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய மத்துகம பகுதியை சேர்ந்த தாதி ஒருவருக்கே கொவிட்-19 தொற்றுறுதியானது.

அவர் தற்போது களுத்துறை நாகொடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடன் நெருங்கிய தொடர்புடைய 12 பேர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பிலியந்தலை  கஹபொல சிலுமின சேய பிரிவெனா விகாரையின் 69 பிக்குகள் உள்ளிட்ட 89 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிக்கு ஒருவரின் தாயாருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.