பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்: நிசர்கா புயல் தடுப்பு, ஊரடங்கு தளர்வு குறித்து ஆலோசனை
நாளை காலை 11 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்: நிசர்கா புயல் தடுப்பு, ஊரடங்கு தளர்வு குறித்து ஆலோசனை மத்திய அமைச்சரவை கூட்டம் (பழைய படம்) நாளை காலை 11 மணியளவில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் நிசர்கா புயல் பாதிப்பு ஏற்பட்டால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், 8-ம்தேதி சில தளர்வுகள் அனுமதிக்கப்படும் என அறிவித்த நிலையில் அதன் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில் இன்று குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது நிசர்கா புயலை எதிர்கொள்ள அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.