கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்களுக்கு எமனாக மாறிய மரம்- பலாங்கொடையில் சம்பவம்

கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்களுக்கு எமனாக மாறிய மரம்- பலாங்கொடையில் சம்பவம்

பலாங்கொடை-பின்னவல-வலவ்வத்த பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மற்றுமொரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வலவ்வத்த தோட்டத்தைச் சேர்ந்த குறித்த மூன்று பெண்களும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே அதில் இருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.