இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி இதை தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தின் பல இடங்களில் இருந்தும் 285 பேருக்கான கொரோனா பரிசோதனைகள் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்டது.

இதில் 276 பேருக்கு தொற்று இல்லை என்றும் 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி இதை தெரிவித்துள்ளார்.