இலங்கை மின்சார துறையின் துரித அபிவிருத்திக்காக ரஷ்யா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு...!

இலங்கை மின்சார துறையின் துரித அபிவிருத்திக்காக ரஷ்யாஅரசாங்கத்தின் ஒத்துழைப்பு...!

இலங்கை மின்சார துறையின் துரித அபிவிருத்திக்காக  ரஷ்யா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மின்சார அமைச்சருக்கும் ரஷ்ய தூதுவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை.

இலங்கை மின்சாரதுறையின் துரித அபிவிருத்திக்காக  ரஷ்யா அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய சகல ஒத்துழைப்பும் வழங்குவதற்கு தமது நாட்டு அரசாங்கம் தயாராகவுள்ளது என இலங்கைக்கான ரஷ;ய தூதுவர் யூரிமதேரி அவர்கள் தெரிவித்தார்.

மின்சார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுடன் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போது அவர் இவ்வாரு கூரினார். அவர் தொடர்ந்தும் பேசுகையில்

 ரஷ்யா  நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் நீன்டகாலமாக இருக்கும் நல்லுறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியனவற்றை மென்மேலும் பலப்படுத்துவதற்காக வழங்கக்கூடிய சகல ஒத்துழைப்பும் வழங்குவதற்கு தயாராகவுள்ளது என்றும ;அவர் தெரிவித்தார்.

இலங்கை மின்சாரதுறையின் அபிவிருத்திற்காக அணுசக்தி தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொடுப்பதற்கான கலந்துறையாடல்கள் ஏற்கனவே நடைபெற்றதோடு  ரஷ்யாநாட்டு அணுசக்தி ஆணைக்குழு மூலம் இலங்கை மின்சாரசபைக்கு அறிவு, பயிற்சி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு தமது நாடு தயாராகிவுள்ளது என்றும் ரஷ்ய நாட்டுத்தூதுவர் மேலும் தெரிவித்தார்.

திடமான அபிவிருத்தி நோக்கங்களுக்கமைய செயல்படும் தற்போதைய அரசாங்கம் இலங்கை மின்சாரதுறையில் நடாத்துவதற்கு மேற்கொள்ளவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ரஷ்யா தூதுவரை இங்கு நினைவுபடுத்திய மின்சார அமைச்சர் டலஸ் அழகப்பெரும, மீள் பிரப்பாக்கசக்தினூடாக மின்சார உற்பத்தியின் தேவையையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும இலங்கைமின்சாரதுறையின் அபிவிருத்திற்காக ஒத்துழைப்பு வழங்குவதற்காக முன்வந்தமை தொடர்பாக தமது நன்றியினையும் தெரிவித்தார்.

ரஷ்ய தூதுவர் அலுவலகத்தின் மூன்றாவது செயளாளர் ஒலேக் ருட்னெவ் உம் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டார்.