யாழ் - பருத்தித்துறை வீதியில் கோர விபத்து: தீயணைப்பு வீரர் பரிதாப பலி!
யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனம் ஒன்று விபத்துக்குள்ளகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் 02.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து தெரிய வருகையில்,
யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனம் பருத்தித்துறை மணற்காட்டுப் பகுதியில் தீயினை அணைப்பதற்காக விரைந்து சென்றுள்ளது.
பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் வாகனத்தின் வலது பக்க முன்ரயர் காற்று போனதன் காரணமாக, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ளது .
குறித்த விபத்தில் 37 வயதுடைய அரியரட்ணம் சகாயராஜா எனும் தீயணைப்பு வீரர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை காயமடைந்த மேலும் இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக் குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.