போராட்டக்காரர்கள் கலவரம் - காரின் மீது போலி இரத்தம்! பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு

போராட்டக்காரர்கள் கலவரம் - காரின் மீது போலி இரத்தம்! பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிஸனின் வாகனம் மீது போலி இரத்தம் ஊற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் சென்றிருந்தபோது, அகதிகளின் விடுதலையை கோரி சுமார் ஐம்பது போராட்டக்காரர்கள் அங்கு கூடி பிரதமருக்கு எதிராக பெரும் குரல் எழுப்பினர்.

இதன்போது பிரதமரின் கார் உட்பட அவர் சமூகமளித்திருந்த மண்டபத்திற்கு தக்காளி மற்றும் இரத்தம் போன்று தயாரிக்கப்பட்ட சிவப்புச்சாயத்தை எறிந்து சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தினால் அங்கு சமூகமளித்திருந்த பிரதமர் அவரது பாதுகாப்பு பிரிவினரால் வேறொரு பாதையினால் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

மனுஸ் – நவுறு தீவுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு குயின்ஸ்லாந்தில் காலவரையறையின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 120 அகதிகளின் விடுதலைக்காக அங்குள்ள அகதிகள் நல அமைப்புக்கள் பல மாதங்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.