மன்னாரில் கொரோனா அபாயம்! பொதுமக்களுக்கு முக்கிய கோரிக்கை
கொரோனா தொற்றிலிருந்து உங்களையும் ஏனையோர்களையும் பாதுகாக்க உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு மன்னார் பிரதேச செயலாளர் எஸ். பிரதீபன் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர்,
நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றானது எமது பிரதேசங்களிலும் பரவிக்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கொழும்பு,கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மன்னாரிற்கு வருகை தந்தோர் சுகாதார பிரிவினருடன் தொடர்பு கொள்ளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.