காவல்துறை மேலதிக தலைமையகத்திற்குள் நுழைய முற்பட்ட நபரை CCDயிடம் ஒப்படைப்பு..!

காவல்துறை மேலதிக தலைமையகத்திற்குள் நுழைய முற்பட்ட நபரை CCDயிடம் ஒப்படைப்பு..!

பம்பலபிடிய காவல்துறை மேலதிக தலைமையகத்தில் உள்ள சர்வதேச காவற்துறை சங்கத்திற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட நபர், இன்று கொழும்பு குற்றவியல் பிரிவினரிடம் (CCD) ஒப்படைக்கப்படவுள்ளார். தாம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பணிபுரிவாதாகவும், தற்போது சர்வதேச காவல்துறை அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளவற்காக இங்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவித்து குறித்த வாளகத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளார்.

இவரது நடவடிக்கைகளில் சந்தேகம் நிலவியதைத் தொடர்ந்து நாராஹென்பிடி காவல்துறையினருக்கு இது தொடர்பில் தகவல் வழங்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் 23 வயதுடைய கொழும்பு 12 பகுதியில் வசித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.