பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பிக்கும் நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இடம்பெறவுள்ள பரீட்சைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக 3 இலட்சத்து 68 ஆயிரத்து 824 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், 2 ஆயிரத்து 648 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரையில் இடம்பெறும்.
உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அனைத்துப் பரீட்சை நிலையங்களிலும் தொற்றும் நீக்கும் செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளது.
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் பாதுகாப்புக் கருதி 12 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள மாணவர்களுக்காக குறித்த நிலையங்களுக்கு அருகில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகள் பரீட்சை நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.