குறு, சிறு விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி- முதல்வர் விஜய் உத்தரவு

குறு, சிறு விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி- முதல்வர் விஜய் உத்தரவு

கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்ற ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

ரூ. 50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுககு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

துறை ரீதியான அலுவலர்களுடனான ஆய்வுக்கு பிறகு, ரூ.50,000 வரை பயிர்க்கடனை தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

2025-ம் ஆண்டு மே மாதம் முதல் 2026ம் ஆண்டு பிப்ரவரி வரை கடன் பெற்றவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செல்லும் என முதலமைச்சர் விஜய் உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும், ஒரு லட்சத்திற்கும் மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.5,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.2,044 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.