கட்டுநாயக்கவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
சீதுவ பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் சுமார் 800 பேர் நேற்று பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படடுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் கையுறை தயாரிப்பு தொழிற்சாலை ஊழியர்கள் சுமார் 500 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.