பிரதான தொழிற்சாலைகள் அனைத்திற்கும் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!
மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தற்போது சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பெண் ஊழியர்கள் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குறித்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவு உட்பட மூன்று விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதேவேளை எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பிரதான தொழிற்சாலைகள் அனைத்திலும் பி.சி.ஆர் சோதனை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் பணியாளர்கள் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.
குறித்த நபர்கள் கண்டி, கட்டுநாயக்க எவரிவத்த, படல்கம, ஜா எல, தங்கொட்டுவ ஆகிய பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவர்கள் என அடயாளம் காணப்பட்டுள்ளது.