159 ரன்களே இலக்காக நிர்ணயித்துள்ளது ஐதராபாத்: சேஸிங் செய்யுமா ராஜஸ்தான்

மணிஷ் பாண்டே அரைசதமும், வார்னர் 48 ரன்கள் அடித்த போதிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 159 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஐதராபாத்.

ஐபிஎல் தொடரின் 26-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பேர்ஸ்டோவ், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக கம் இறங்கினர். அதிரடி வீரர்களான இருவரும் தொடக்கத்தில் இருந்தே ரன்கள் அடிக்க திணறினர்.

 

பேர்ஸ்டோவ் 16 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வார்னர் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. 14.4 ஓவரில் 96 ரன்கள் எடுத்திருந்த போது வார்னர் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 38 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை அடித்தார்.

மணிஷ் பாண்டே 44 பந்தில் 54 ரன்கள் சேர்த்து வெளியேறினார். கேன் வில்லியம்சன் - பிரியம் கார்க் ஜோடி 2.2 ஓவரில் 36 ரன்கள் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் அடித்துள்ளது.

 

கேன் வில்லியம்சன் 12 பந்தில் 22 ரன்களும், பிரியம் கார்க் 8 பந்தில் 15 ரன்களும் சேர்த்தனர்.