தலவாக்கலை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து- மூவர் காயம்

தலவாக்கலை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து- மூவர் காயம்

தலவாக்கலை-ஒலிரூட் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

வட்டகொடை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி நேற்றிரவு (10) தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் ஒலிரூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணமென காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் படுங்காயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இதில் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.