சுகாதார பரிந்துரைகளுக்கு அமைவாக 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம்

சுகாதார பரிந்துரைகளுக்கு அமைவாக 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம்

கொவிட் 19 தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கிலான சுகாதார பரிந்துரைகளுக்கு அமைவாக 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை தற்போது இடம்பெற்று வருகிறது.

இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமான இப்பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,936 மத்திய நிலையங்களில் இடம்பெறுகின்றன.

இன்று இடம்பெறும் 5 ஆம் தரபுலமை பரீசில் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 31 ஆயிரத்து 694 பேர் தோற்றவுள்ளனர்.

இந்த பரீட்சையானது நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 936 பரீட்சை நிலையங்களில் இடம்பெறுகிறது.

கொவிட் 19 தாக்கம் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் 12 விசேட பரீட்சை நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் முகாம்கள் மற்றும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்காக குறித்த 12 விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.