யாழில் இப்படியும் போதை வியாபாரிகள்- மடக்கிப்பிடித்த பொலிஸ்
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குடு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபரை, பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது குடுவினை மூக்குதுவாரத்திற்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் முலவைச்சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கைதானவர் அதே பகுதியினை சேர்ந்தவர் என பொலிஸார் கூறினர். கைதான நபரின் மூக்கு துவாரத்திற்குள் இருந்து 550 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.