
யாழ். இணுவிலைச் சேர்ந்த மாணவி கொழும்பில் திடீர் மரணம்!
களனி பல்கலைக்கழகத்தில கல்வி கற்கும் யாழ். இணுவிலைச் சேர்ந்த மாணவி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி கொழும்பு - வெள்ளவத்தையில் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா பீதி உச்சமடைந்துள்ள நேரத்தில் குறித்த மாணவி திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்த யாழ். இணுவிலை சேர்ந்த களனி பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவி செல்வி யதீசா ஸ்ரீதர் (வயது-20) என்பவரே திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்.