ரோம் நகரில் உள்ள இலங்கை தூதரகத்திற்குள் கொரோனாவுடன் நுழைந்த இலங்கையர்

ரோம் நகரில் உள்ள இலங்கை தூதரகத்திற்குள் கொரோனாவுடன் நுழைந்த இலங்கையர்

இத்தாலி - ரோம் நகரில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அக்டோபர் 2ஆம் திகதி வருகை தந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த அலுவலகம் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை மூடப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்படும் என்று தூதரகம் அறிவிக்கிறது.

இதேவேளை பாதிக்கப்பட்ட நபர் இலங்கையர் என்றும், அவர் ஆவணங்களை கையாள்வதற்காக தூதரகத்திற்கு வந்ததாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இததையடுத்து தூதரக உறுப்பினர்கள் மீது பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த இத்தாலி சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தூதரக உறுப்பினர்கள் ஒரு அறிக்கையில், தெரிவித்தார்.