சிவில் பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த அனுராதபுரம் புனித பூமி

சிவில் பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த அனுராதபுரம் புனித பூமி

அனுராபுரம் வரலாற்று சிறப்புமிக்க புனித பூமியை சுத்தம் செய்து பராமரிக்கும் பணிகள் சிவில் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்த நிலையில், இதன்போது குறித்த பகுதிகள் பராமரிப்பு இன்றி காணப்படுவதாக விகாரதாதிபதி ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பகுதிகளின் பராமரிப்பு பணிகள் சிவில் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு வரையில் சிவில் பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதியானது கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அவர்களிடமிருந்து அகற்றப்பட்டது.

எவ்வாறாயினும், தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புதிய அரசாங்கத்தில் இது மீண்டும் சிவில் பாதுகாப்பு பிரிவினரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.