இருபது தொடர்பில் சுதந்திரக் கட்சி வெளியிட்டுள்ள விடயம்

இருபது தொடர்பில் சுதந்திரக் கட்சி வெளியிட்டுள்ள விடயம்

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச்சட்ட மூலம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்னும் சில தினங்களில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

20ம் திருத்தச்சட்டமூலம் தொடர்பாக ஆராய்வதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் குழு, அந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நாட்களில் 20 ஆம் அரசியலமைப்பு சட்டமூலம் தொடர்பான யோசனைகள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இதுதொடர்பாக பிரதமராலும் குழு ஒன்று நியமிக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டிருந்தது.

அதே நேரம், 20ம் திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அடிப்படையில் நடந்த விசாரணைகளின் பிரகாரம், அதுகுறித்த தமது வியாக்கியானத்தை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம், கடந்த தினம் சபாயாகருக்கு அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.