நண்பருடன் மீன் பிடிக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்- வவுனியாவில் சம்பவம்

நண்பருடன் மீன் பிடிக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்- வவுனியாவில் சம்பவம்

வவுனியா மணியர்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கபட்டுள்ளது.

குறித்த நபர் வேறு ஒருவருடன் நேற்று (10) காலை மணியர்குளம் பகுதியில் அமைந்துள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

இந்நிலையில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவரை காணாத அவரது நண்பர் தேடிச்சென்று பார்தத போது அவர் குளத்தில் சடலமாக கிடந்தமை தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கருப்பையா செல்வராசா வயது 50 என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.