உறவினர் கண்டித்ததால் மாணவி எடுத்த விபரீத முடிவு - சோகமயமானது தருமபுரம்

உறவினர் கண்டித்ததால் மாணவி எடுத்த விபரீத முடிவு - சோகமயமானது தருமபுரம்

காதலனுடன் தொலைபேசியில் உரையாடுவதனை உறவினர் கண்டித்ததனால் மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டநிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

தருமபுரம் மகாவித்தியலாயத்தில் தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 8ம் திகதி மேற்படி மாணவி தொலைபேசியில் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்துள்ளார். இதனை அவதானித்த உறவினர் தொலைபேசியினை பறித்தெடுத்துள்ளதுடன், கடுமையாக கண்டித்துள்ளார். மனமுடைந்த மாணவி நேற்று ஓரு வகை மருந்துகளை உட்கெண்டுள்ளார். வாந்தி எடுத்ததனை அவதானித்த உறவினர் மணவியை தருமபுரம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணையினை திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.