வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் தொடர்பில் திணைக்கள தலைவர் வெளியிட்டுள்ள தகவல்

வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் தொடர்பில் திணைக்கள தலைவர் வெளியிட்டுள்ள தகவல்

ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்கள தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அனுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு தற்போது தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் 04 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் இரு தினங்களில் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்களை விரைவில் அச்சிட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தள்ளார்.