நாட்டின் தலைவருடன் இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பு!
ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்குமிடையில் நாளை முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஓகஸ்ட் 5 பொது தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து அது தொடர்பான செயற்பாடுகளும் சுகாதார நடைமுறைகள் தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது பேசப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கொரோனா நிலைமையால் வழமையை விட இம்முறை தேர்தல் கடமைகளில் பாதுகாப்புத் தரப்பினர் கூடுதலான அளவில் தேவைப்படுவதால் அது தொடர்பான விசேட கோரிக்கையையும் தேர்தல் ஆணைக்குழு தலைவர், கோட்டாபயவிடம் விடுக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தேர்தல் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியம் தொடர்பிலும் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கைவிடுக்கவுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் முடிந்தவுடன் புதிய நாடாளுமன்றத்தினை கூட்டும்போது எடுக்கப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மஹிந்த தேசப்பிரிய இதன்போது கோட்டாபயவுக்கு விளக்கமளிக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.