மீண்டும் கொரோனா தொற்றிய பெண்ணால் சமூக பரவல் ஏற்படுமா? அனில் ஜாசிங்க விளக்கம்

மீண்டும் கொரோனா தொற்றிய பெண்ணால் சமூக பரவல் ஏற்படுமா? அனில் ஜாசிங்க விளக்கம்

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய பெண் ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அது ஏனையோருக்கு பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார். அனுராதபுரம் - கெபிதிகொல்லேவ - ஹல்மில்லேவ பிரதேசத்தினை சேர்ந்த பெண்ணே மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பெண் அனுராதபுரம் மருத்துவமனையில் இருந்து கொழும்பு ஐ டி எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். குணமடைந்து விட்டாதா வீடு திரும்பிய நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இது சமூக பரவலாக இருக்குமா என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே வைத்தியர் அனில் ஜாசிங்க இதை குறிப்பிட்டுள்ளார்.