கொரோனா நெருக்கடி! வெளிவருகிறது அதி விசேட வர்த்தமானி

கொரோனா நெருக்கடி! வெளிவருகிறது அதி விசேட வர்த்தமானி

கொவிட்-19 வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விரைவில் வெளியிடப்பட உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

கொவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சட்ட திட்டங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா நோய்த் தொற்று தடுப்பிற்கு பொதுமக்கள் போதியளவு ஒத்துழைப்பு வழங்காத காரணத்தினால் இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக அரசாங்க தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சில பணியாளர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவதற்கு விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த பணியாளர்கள் தங்கள் நெருக்கமாக பழகியவர்கள் பற்றிய விபரங்களையும் வெளியிடத் தவறியுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான சுகாதார விதிமுறைகள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் தயாரிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சு மற்றும் சட்டப் பிரிவு என்பனவற்றின் அனுமதியுடன் வார இறுதியில் வெளியிடப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.