தொடர்ந்தும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம்.!
கம்பஹா மாவட்டத்தின் 18 காவல்துறை பிரிவுகளில் அமுலாக்கப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.
இந்தம நிலையில், குறித்த பகுதிகளில் உள்ள சதொச, கூட்டுறவு நிலையம், அரச மருந்தகம், சிறப்பு அங்காடிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் என்பனவற்றை இன்று காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை திறக்கமுடியும என காவல்துறை அறிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்ட குறிதத பகுதிகளில் நேற்றைய தினம் முதல் முறையாக குறித்த விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதன்போது, பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அந்த விற்பனை நிலையங்கள வளாகத்தில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 27 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரவித்துள்ளார்.