ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் சுற்றுலா சென்றவருக்கு ஏற்பட்ட நிலை
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை நிறுவன ஊழியர்களுடன் கதிர்காமத்திற்கு சுற்றுலா சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி – கம்பளை, உடகல்பாய பிரதேசத்தில் வசிக்கும் நபருக்கே இவ்வாறு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த வாரம் ஊழியர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
இதையடுத்து காய்ச்சலுக்குள்ளான நபரை பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்சமயம் குறித்த நபர் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.