டிக்கோயாவிலும் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் டிக்கோயா புளியாவத்தை பகுதிக்கு வருகை தந்தமையால் ஐந்து பேர் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 12குடும்பங்களை சேர்ந்த 65பேர் சுயதனிமைப்படுத்தபட்டுள்ளனர். மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் டிக்கோயா புளியாவத்தை ஹோன்சி தோட்டப் பகுதிக்கு வந்துள்ளமையால் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருக்க கூடும் என்ற சந்தேகத்தில் பெண்ணின் கணவர் தாய் இரண்டு பிள்ளைகள் என மொத்தம் ஐந்து பேர் பீ.சி.ஆர் பரீசோதனைக்காக ரந்தெம் பகுதிக்கு இராணுவத்தினரின் பாதுகாப்போடு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் குறித்த தோட்ட பகுதியில் 12 குடும்பங்களை சேர்ந்த 65 பேர் சுயதனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். இன்று இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறித்த பெண் மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையிலிருந்து நேற்று அதிகாலை பேருந்தில் ஹட்டனுக்கு வந்து ஹட்டனில் இருந்து டிக்கோயா புளியாவத்தை ஹோன்சி தோட்டப் பகுதிக்கு வான் ஒன்றில் சென்றதாக பொது சுகதார பரிசோதகர்ளின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. இதேவேளை தனிமைப்படுத்தபட்டுள்ள 12 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேருக்கான நிவாரணங்களை வழங்க தோட்ட நிர்வாகம் முன்வந்துள்ளமை குறிப்பிடதக்கது.