சுஷாந்தின் முன்னாள் காதலியின் டுவீட் … சமூக வலைதளங்களில் வைரல் !

பிரபல ஹிந்தி திரைப்பட நடிகரும் தோனியின் சுயசரிதைப் படத்தில் நாயகனாக நடித்தவருமான சுஷாந்த் சிங் ராஜ்புட் நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

பிரபல ஹிந்தி திரைப்பட நடிகரும் தோனியின் சுயசரிதைப் படத்தில் நாயகனாக நடித்தவருமான சுஷாந்த் சிங் ராஜ்புட்  தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது இந்தியாவில் உள்ள அத்துனை சினிமா வட்டாரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை 6 வருடங்கள் சுஷாந்தின் காதலியாக இருந்த நடிகை அங்கிதா லோகண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.

அதில், கடவுள் உங்ளின் வாழ்க்கையில் இருந்து சிலரை நீக்குகிறார் என்றால்… அவர் உங்களுடன் நடந்த உரையாடலைப் பற்றிக் கேட்டுள்ளார் என்று 4: 30 மணியளவில் பதிவிட்டு பின் 6 மணி அளவில் அதை நீக்கிவிட்டார். மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் ஒரு பதிவிட்டிருந்தார் நீ தனிமையில் இருக்க வேண்டிய அவசியமில்லை; நான் உன் இதயத்திலும் வாழ்க்கையிலும் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான பதிவை நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.