தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு!
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ள 136 பேர் இன்று வெளியேற்றப்படவுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.
கல்பிட்டி மற்றும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் தனியார் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களே இவ்வாறு வெளியேற்றப்படவுள்ளனர்.
தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த அனைவரும் விடுவிக்கப்படவுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணி மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 49 ஆயிரத்து 689 தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளதாக கொரோனா தடுப்பு செயலணி குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 85 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேலும் 9 ஆயிரத்து 630 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.