இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து..! 13 பேர் காயம்

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து..! 13 பேர் காயம்

கொக்கல்ல பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை அழைத்து சென்ற சிற்றுந்து ஒன்று பேரூந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை வேளையில் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த 12 ஊழியர்களும் சிற்றுந்தின் சாரதியும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பேரூந்து, பேரூந்து தரிப்பிடம் ஒன்றில் நின்ற வேளையில் பின்னால் வந்த மேற்குறிப்பிடப்பட்ட சிற்றுந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து பேரூந்தின் பின்புறம் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன சாரதியின் நிலை மோசமாக இருப்பதாக வைத்தியாசலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.