ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் இன்று காலை முதல் இரவு 8 மணிவரையில் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று காலை முதல் மருந்தகங்கள், சதொச நிறுவனம்  பல்பொருள் விற்பனை நிலையங்கள், கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதன் அடிப்படையில் கம்பஹா, கணேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிப்பிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வேயாங்கொட, மினுவாங்கொட, வீரங்குல, வெலிவேறிய, பல்லேவேல மற்றும் யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கும் களனி வலயத்திற்குட்பட்ட ஜா எல கந்தான பொலிஸ் பிரிவுகளுக்கும் நீர் கொழும்பு வலயத்திற்குட்பட்ட திவுலப்பிட்டிய மற்றும் சீதுவ ஆகிய பகுதிகளுக்கும்   இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்பட்டுத்தப்பட்டுள்ளது.