இன்றைய ராசி பலன்கள் 09/10/2020

இன்றைய ராசி பலன்கள் 09/10/2020

மேஷம்

எடுத்த முயற்சி கைகூடும் நாள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றத் துடிப்போடு செயல்படுவீர்கள். தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை தீரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.

ரிஷபம்

அலைபேசி வழித் தகவல் அனுகூலம் தரும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். குடும்ப உறுப்பினரிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.

மிதுனம்

திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். கடன் சுமை குறையும். உறவினர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் மாறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த
சலுகைகள் கிடைக்கும்.

கடகம்

தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். செலவுகளைக் குறைத்துச் சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கணிசமாகக் கிடைக்கும்.

சிம்மம்

பொருளாதார விருத்தி ஏற்படும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொழிலில் தொல்லை கொடுத்து வந்தவர்கள் எல்லையை விட்டு விலகிச் செல்வர். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

கன்னி

வரவு திருப்தி தரும் நாள். வாங்கல் - கொடுக்கல்களில் சரளம் ஏற்படும். குடும்ப அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

துலாம்

வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர்.

விருச்சகம்

விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவதன் மூலம் விரயங்கள் குறையும் நாள். அமைதி உண்டாக அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. சுற்றத்தாரின் பகைக்கு
ஆளாக நேரிடலாம்.

தனுசு

வெற்றி தேவதை வீடு தேடி வரும் நாள். பணம் உங்களின் பையை நிரப்பும். நினைத்த காரியத்தை நினைத்த படியே செய்து  முடிப்பீர்கள். சூழ்நிலைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.

மகரம்

அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும் நாள். எதிரிகளின் தொல்லை குறையும். வியாபாரம், தொழில் சம்பந்தமாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

கும்பம்

அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிட்டும் நாள். பணவரவு
 போதுமானதாக இருக்கும். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் லாபம் கிடைக்கும். தொழிலில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

மீனம்

நினைத்தது நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். அதிக லாபம் ஈட்ட என்ன செய்யலாம் என்ற சிந்தனை மேலோங்கும். வரவு திருப்தி தரும்.