முஸ்லிம் மத விவகார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை
பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொள்ளக்கூடியவர்களின் எண்ணிக்கையை குறைக்க முஸ்லிம் மத விவகாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, பள்ளிவாசல்களில் நடைபெறும் மத நடவடிக்கைகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என்று முஸ்லிம் மத மற்றும் கலாச்சார விவகாரத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக துறை இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இதேவேளை முடிந்தவரை வீட்டிலிருந்து பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.