கொவிட்-19 தொற்றுறுதியானவர்களுக்காக 14 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன..!
கொவிட்-19 தொற்றுறுதியானவர்களை அனுமதிப்பதற்காக இதுவரை 14 வைத்தியசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதானி விஷேட மருத்துவர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
ஐ.டி.எச், வெலிகந்த, மினுவாங்கொடை, தெல்தெனிய உள்ளிட்ட 14 வைத்தியசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மினுவாங்கொடை ப்ரென்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் சேவையாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட 562 பேர் தற்போது ஹபராதுவ - கொக்கலவில் அமைக்கப்பட்டுள்ள 3 தனிமைப்படுத்தல் நிலையங்களில்; தங்க வைக்கப்பட்டுள்ளனர்
பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின்னர் கடந்த 6 ஆம் திகதி முதல் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.