பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்!
மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிற்றூண்டிச்சாலை ஊழியர் ஒருவருக்கு கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
55 வயதையுடைய நபர் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணிபுரிந்த குறித்த நபரின் மகனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.