வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார்!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பியோடிய நபர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் நேற்று இரவு ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றிருந்தார்.
இந்நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் மக்களின் உதவியை நாடினார்கள்.
இதற்கமைய கொழும்பு கோட்டையில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஐ.டி.எச் வைத்தியசாலையில் சேர்க்கப்படவுள்ளார் என்று கூறப்படுகிறது.