மினுவாங்கொடை ஊழியர்களுக்கு விசேட அறிவுறுத்தல்!

மினுவாங்கொடை ஊழியர்களுக்கு விசேட அறிவுறுத்தல்!

மினுவாங்கொடையில் கொரோனா தொற்று பரவலுக்கு உள்ளாகியுள்ள, தனியார் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தில் தொழில்புரியும், கம்பஹா பிரதேசத்தில் தற்போது வீட்டில் அல்லது தங்குமிடங்களில் இருக்கும், அனைவரும் இன்று மாலை 4 மணி அல்லது அதற்கு முன்னர் பொலிஸாரினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பிரிவினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடங்கள் பின்வருமாறு:

01. ஶ்ரீ போதி விளையாட்டு மைதானம்
02. கனேமுல்ல பொலிஸ் நிலையம் முன்னாள்
03. யகஹட்டுவ சந்தி
04. வெயாங்கொடை பொலிஸ் விளையாட்டு மைதானம்
05. அத்தனகல்ல பிரதேச செயலாளர் அலுவலகம்
06. பல்லேவல தபால் நிலைய வளாகம்
07. மீரிகம பிரதான பஸ் நிலைய வளாகம்
08. வீரகுல பொலிஸ் நிலையம் முன்பாக
09. மிரிஸ்வத்த பிரதேச சபை வளாகம்
10. நெல்லிகஹமுல்ல எரிபொருள் நிலையம் அருகில்
11. வெலிவேரிய பொலிஸ் நிலையம் முன்பாக
12. வேக்கே பிரதேச செயலாளர் அலுவலகம் அருகில்
13. தொம்பே பொலிஸ் நிலையம் முன்பாக
14. பெல்பிட கனிஷ்ட வித்தியாலயம் அருகில்

அத்துடன், குறித்த நிறுவனத்தில் பணிபுரியும், நாட்டின் வேறு பகுதிகளில் உள்ளவர்கள், தமக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு தமது விபரங்களை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு எதிராக செயற்படுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.