காவற்துறை தலைமையகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு..!

காவற்துறை தலைமையகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு..!

கொவிட்-19 பரவலை கட்டுப்பத்துவதற்காக காவல்துறைமா அதிபர் கட்டுப்பாட்டு மையம் மற்றும் காவல்துறைமா அதிபர் செயற்பாட்டு மையம் என்பன காவல்துறை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவல் குறித்து பொதுமக்கள் 1933 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு, காவல்துறைமா அதிபர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

அத்துடன், 0115 97 87 01, 0115 97 87 03, 0115 97 87 19, 0115 97 87 22, 0115 97 87 37, 0112 47 27 57 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்த முடியும்.

இதேநேரம், 0112 44 44 80, 0112 44 44 81, 0115 97 87 16, 0115 97 87 31 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு காவல்துறைமா அதிபர் செயற்பாட்டு மையத்திற்கு தகவல் வழங்க முடியும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.