பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் இரண்டிற்கு கொரோனா குறித்து எச்சரிக்கை!

பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் இரண்டிற்கு கொரோனா குறித்து எச்சரிக்கை!

பிரித்தானியாவிலுள்ள பிரபல பல்கலைக்கழகங்கள் இரண்டிற்கு கொரோனா குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின்  Manchester  Metro மற்றும் Sheffield ஆகிய பல்கலைக்கழகங்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Manchester  பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சுமார் ஆயிரம் மாணவர்கள் மற்றும்  பணியாளர்கள் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  Manchester   நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்  சுமார் ஆயிரத்து 700 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை Sheffield பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய கற்கை நெறிகள் இணையதளமூடாக இடம்பெறுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Manchester  Metro  பல்கலைக்கழகத்திற்கு கொரோனா குறித்து இரண்டாவது தடவையாக  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.