இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 4,880 பி.சி.ஆர்.சோதனைகள்
நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பி.சி.ஆர். பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி நேற்று மாத்திரம் 4,880 பி.சி.ஆர்.சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி முதல் நேற்று வரை நாட்டில் மொத்தமாக 303,381 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 4,252 ஆக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் மொத்தமாக 739 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் மெத்தமாக 832 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் மேலும் பலருக்கு பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது சோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.
இது தவிர ஐக்கிய அரபு எமிரட்ஸிலிருந்து வந்த நால்வரும், இந்தியாவிலிருந்து வருகை தந்த மூவரும், கட்டார், குவைத் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக நேற்றைய தினம் கண்டறியப்பட்டது.