கம்பஹாவில் அடையாளம் காணப்பட்ட முதலாவது தொற்றாளர் தொடர்பில் வெளியான தகவல்! திணறும் அதிகாரிகள்
கம்பஹாவில் அண்மையில் அடையாளம் காணப்பட்ட ஆடைத் தொழிற்சாலை பெண் இந்த கொவிட்-19 நோய்த் தொற்று கொத்தணியின் முதல் தொற்றாளி கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
மினுவன்கொடை தனியார் ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றிய சிலருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 20ம் திகதி முதல் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டிருந்தன எனத் தெரியவந்துள்ளது.
நோய் தொற்று பரவியதாக கம்பஹா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட பெண், இந்த கொவிட்-19 நோய்த் தொற்று கொத்தணியின் முதலாம் நபர் கிடையாது என தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பாளர் நிபுணத்துவ மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த பெண்ணுக்கு நோய்த் தொற்று குறித்த அறிகுறிகள் கடந்த செப்டம்பர் மாதம் 28ம் திகதி தென்படக் தொடங்கியுள்ளது. இந்தப் பெண் கடந்த 30ம் திகதியே கம்பஹா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொண்ட போது 20ம் திகதி முதலே நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் பணியாளர்கள் மத்தியில் காணப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.
பின்னர் இந்த நோய் குறிகள் அதிகரித்துள்ளன. இந்த நிலைமை குறித்த சுகாதாரப் பிரவிற்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு வெளிநாட்டவர்கள் வருகை தந்தைக்கான சான்றுகள் இன்றும் கிடைக்கவில்லை. இந்த நோய்த் தொற்று எவ்வாறு பரவியது என்பது குறித்த தகவல் கிடைத்தால் நல்லது. அவ்வாறு கிடைக்கப் பெறாவிட்டாலும் எம்மால் நோயைக் கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர் சுதத் சமரவீர ஊடகங்களிடம் நேற்று தெரிவித்துள்ளார்.