திவுலபிட்டி பாடசாலை மாணவர்களின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின

திவுலபிட்டி பாடசாலை மாணவர்களின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின

திவுலபிட்டியில் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 16 வயதான சிறுமியுடன் பள்ளியில் படித்த மாணவர்களின் கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.

53 ஆசிரியர்கள் மற்றும் 48 ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவி படித்த பள்ளி மாணவர்கள் சுமார் 1,300 பேரை சுய தனிமைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அப்பகுதியில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 42 மாணவர்கள் நீர்கொழும்பில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுடைய பரிசோதனை முடிவுகள் இன்னுமு் வெளியாகவில்லை.

இதேவேளை மேலும் 6 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.