முன்னாள் பிரதமருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம்!

முன்னாள் பிரதமருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், சாட்சியளிமளிப்பதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முற்பகல் முன்னிலையாகியிருந்தார்.

அவரிடம் 1மணித்தியாலங்கள் விசாரணை நடத்துகொண்டிருக்கும் போது அவரிற்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரினால் தொடர்ந்தும் சாட்சியமளிக்க முடியாது போயுள்ளது.

இதன் காரணமாக சாட்சியமளிப்பு பிற்போடப்பட்டு எதிர்வரும் 13ஆம் திகதி ஆணைக்குழுவில் மீண்டும் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.