ஜா - எல பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி
மினுவாங்கொட - ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் முன்னதாகவே இரணவில பகுதிக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
இதன்படி குறித்த இருவரும், 43 மற்றும் 50 வயதுடையவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் ஜா - எல பகுதியில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த 101 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.