மினுவங்கொட ஆடை தொழிற்சாலையின் மற்றுமொரு பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று

மினுவங்கொட ஆடை தொழிற்சாலையின் மற்றுமொரு பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று

மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு மினுவங்கொட ஆடை தொழிற்சாலையின் 41 வயதுடைய பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 39 வயதுடைய குடும்பப் பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை நேற்றுமுன்தினம் உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து தற்போதுவரை 73 பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் கொரோனவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மினுவங்கொட மற்றும் இரணவில வைத்தியசாலைகள் பயன்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.