வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக, வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 425 இலங்கையர்கள் இன்றையதினம் நாடு திரும்பியுள்ளனர்.

இதன்படி, கட்டாரில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 142 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான, QR 668 எனும் விசேட விமானத்தின் மூலம் இவர்கள் இன்று அதிகாலை 1.45 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக, நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஐப்பானில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 283 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான, UL 455 எனும் விசேட விமானத்தின் மூலம் இவர்கள் இன்று அதிகாலை 3.25 க்கு மத்தளை விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 400 இலங்கையர்கள் நேற்றைய தினம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான, EK 650 எனும் விசேட விமானத்தின் மூலம் இவர்கள் நேற்று மாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த அனைவரும் மத்தளை விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக,  தெரிவிக்கபடுகின்றது

இதேவேளை, மத்தளை மற்றும் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வருகை தந்த குறித்த அனைவரும் PCR பரிசோதனைகளின் பின்னர், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.