20க்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்றுடன் நிறைவு!

20க்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்றுடன் நிறைவு!

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நான்காவது நாளாகவும் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

இன்றைய தினத்துடன் மனுக்கள் மீதான பரிசீலனைகளை நிறைவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து நாளைய தினம் இது தொடர்பிலான எழுத்து மூலமான விரிவுரைகளை முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் எதிர்வரும் காலத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் கடந்த 22ஆம் தகதி நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு வார காலத்தினுள் இதற்கு எதிராக யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் 21 நாட்களுக்கு 20வது திருத்தம் தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் நாடாளுமன்றத்துக்குள் முன்னெடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.